இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெளுத்து வாங்கிய மழை.. 7 பேர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேகவெடிப்பு சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; -
"மேக வெடிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.