ராஜஸ்தானில் கனமழைக்கு இரு நாட்களில் 7 பேர் உயிரிழப்பு.! 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்


ராஜஸ்தானில் கனமழைக்கு இரு நாட்களில் 7 பேர் உயிரிழப்பு.! 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்
x

ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் கனமழை தொடர்பான காரணங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெய்ப்பூர்,

அரபிக்கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த 15-ந்தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டம் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது.

கரையை கடந்த புயல் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால் வடக்கு குஜராத் மற்றும் தெற்கு ராஜஸ்தான் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டியது.

குறிப்பாக குஜராத்தின் பனஸ்கந்தா, படான் மாவட்டங்களில் தொடர்ந்து பேய்மழை பெய்து வருகிறது. பனஸ்கந்தா மாவட்டத்தின் அமிர்காரில் நேற்று காலை 6 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் 206 மி.மீ. மழை பொழிந்துள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் புயல் கரையை கடந்த கட்ச் மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் லேசான மழையே இருந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் கனமழை தொடர்பான காரணங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.


Next Story