இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 780 ஆக உயர்ந்தது.
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 246 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 18 அதிகரித்தது. மொத்தம் 507 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 2 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 27 ஆக நீடிக்கிறது.
Related Tags :
Next Story