மராட்டியம்: விளம்பர பதாகை சரிந்து விழுந்து 8 பேர் பலி
மராட்டியத்தில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது.
அந்த பெட்ரோல் பங்கில் 100 அடி உயர விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் சூறை காற்று காரணமாக 50க்கும் மேற்பட்டோர் இன்று பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை திடீரென சரிந்து விழுந்தது.
இதில், விளம்பர பதாகை பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Related Tags :
Next Story