மேகாலயாவில் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து - 84 கடைகள் எரிந்து நாசம்
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மார்க்கெட் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 84 கடைகள் எரிந்து நாசமாகின.
ஷில்லாங்,
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மார்க்கெட் வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 84 கடைகள் எரிந்து நாசமாகின.
இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மூன்று தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறை மற்றும் ஷில்லாங் நகராட்சி போர்டு அதிகாரிகள், ஷார்ட் சர்க்யூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்த உள்ளூர் எம்எல்ஏ அம்பரீன் லிங்டோ, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களை இடமாற்றம் செய்வது குறித்து முதல் மந்திரி கான்ராட் கே சங்மாவை சந்தித்து ஆலோசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story