குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய மந்திரி தகவல்


குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய மந்திரி தகவல்
x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அமர்வுகளில், மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் மக்களவையில் ஏழு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஒன்பது மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர் கூட்டத்தில் கூறும்போது, அமர்வின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களில் வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2022, எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022, புது தில்லி நடுவர் மன்றம் (திருத்தம்) மசோதா, 2022,

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022, கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2022, அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 மற்றும் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (நான்காவது திருத்தம்) 2022 .ஆகியவை அடங்கும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வாரம் குறைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story