திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழப்பு


திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழப்பு
x

திருமண வரவேற்பில் நடனம் ஆடிக்கொண்டே வந்த இளம்பெண் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே என்ற பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தனது உறவினர் வீட்டிற்கு பங்கேற்க சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இறப்பிற்கான காரணம் என்று பார்க்கும் போது மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளர்ந்துவரும் காலக்கட்டத்திற்கு மத்தியில் இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Next Story