ஆசிரமத்தில் வசிக்கும் 55 வயது பெண்ணை மயக்கி பலாத்காரம்; 4 ஆசிரமவாசிகள் மீது புகார்


ஆசிரமத்தில் வசிக்கும் 55 வயது பெண்ணை மயக்கி பலாத்காரம்; 4 ஆசிரமவாசிகள் மீது புகார்
x

உத்தர பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் வசித்து வரும் 55 வயது பெண்ணை மயக்கி, பலாத்காரம் செய்த 4 ஆசிரமவாசிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.லக்னோ,


உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில், பிரயாக்ராஜ் நகரின் கர்ச்சனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். அதுபற்றி காவல் அதிகாரி தினேஷ் மிஷ்ரா கூறும்போது, கடந்த 4-ந்தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்தனர் என அந்த பெண் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதன்பின்பு, சுயநினைவிழந்த பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி துர்வாசா, சோட்டே மாவ்னி, பர்ஹி மாவ்னி மற்றும் மன்மோகன் என 4 பேர் மீது அந்த பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என அவர்கள் 4 பேரும் மிரட்டியுமுள்ளனர். இதனை தொடர்ந்து, ஆசிரமவாசிகளான 4 பேர் மீதும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் துணை கமிஷனர் பிராச்சி சிங் தெரிவித்து உள்ளார்.


Next Story