கர்நாடகா: நடைப்பயிற்சி ஷூ வில் ஒளிந்திருந்த நாகபாம்பு..!


கர்நாடகா: நடைப்பயிற்சி ஷூ வில் ஒளிந்திருந்த நாகபாம்பு..!
x

கர்நாடகாவில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் ஷூ வில் 7 அடி நீள நாகபாம்பு ஒளிந்து இருந்துள்ளது.

கர்நாடகா:

கர்நாடகா மாநில சிவமொக்கா நகரை யொட்டிய பொம்மனகட்டே பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதற்காக ஷூ ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நடைபயிற்சி முடிந்தவுடன் விட்டு சென்ற ஷூவில் 7 அடி நீள நாக பாம்பு ஒளிந்து இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் கொடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த கிரண் ஷு வில் ஒளிந்திருந்த பாம்பை பிடித்து எடுத்துச் சென்றார். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story