தொழில்நுட்ப கோளாறால் தரையிறங்கிய விமானம்; விபத்தில் சிக்க நேர்ந்ததால் அதிர்ச்சி


தொழில்நுட்ப கோளாறால் தரையிறங்கிய விமானம்; விபத்தில் சிக்க நேர்ந்ததால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 July 2023 12:27 PM IST (Updated: 12 July 2023 12:34 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்குவது போல் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பெங்களூரு,

கர்நாடகாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன (எச்.ஏ.எல்.) விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு பிரிமீயர 1ஏ ரக விமானம் ஒன்று சென்றது.

இந்த நிலையில், அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. கியர் சரியாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. உடனடியாக, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

எனினும், விமானம் ஓடுபாதையில் செல்லும்போது, அதில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டு உள்ளது. இதனால், தண்ணீர் வழியே சென்ற விமானம் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது போல் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்தபோது, அதில் 2 விமானிகள் இருந்தனர். பயணிகள் யாரும் இல்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


Next Story