ரெயிலில் சீட் பிடிக்க புது தந்திரம்... சந்திரமுகியாய் மாறிய இளம்பெண்


ரெயிலில் சீட் பிடிக்க புது தந்திரம்... சந்திரமுகியாய் மாறிய இளம்பெண்
x
தினத்தந்தி 24 Jan 2023 10:59 AM GMT (Updated: 24 Jan 2023 11:09 AM GMT)

டெல்லி மெட்ரோ ரெயிலில் உட்கார இடம் பிடிப்பதற்காக இளம்பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடமணிந்து பயணிகளை அச்சுறுத்தி அதில் வெற்றியும் பெற்று உள்ளார்.புதுடெல்லி,


டெல்லி மெட்ரோ ரெயிலில் காலை, மாலை வேளையில் பணி நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதில், நின்று கொண்டு செல்வதற்கு இடம் கிடைப்பதே பெரிய விசயம் என்ற சூழல் காணப்படும்.

எந்த ஸ்டேசனில் யார் இறங்கி செல்வார்கள் என்பது தெரியாமல், பந்தியில் காத்திருப்பதுபோல், அமர்ந்து இருப்பவர்களை சுற்றி நான்கு பேர் நிற்கும் சூழல் காணப்படும். அமர்ந்து இருப்பவர்கள் எழுந்து, மற்றவர்களுக்கு வழி விடுவதற்கு முன்பு, அவர்கள் இறங்கி செல்ல வேண்டிய ஸ்டேசன் வந்து விடும் நிலையும் காணப்படும்.

ஆனால், இளம்பெண் ஒருவர், சீட் பிடிப்பதற்கு என புதிய யுக்தியை கையாண்டுள்ளார். சந்திரமுகி திரைப்படத்தில் வருவது போன்று அடர் மஞ்சள் வண்ணத்தில் சேலை அணிந்து, பார்க்கவே பயங்கர தோற்றத்துடன் அவர் ரெயிலில் ஏறியுள்ளார்.

அதன்பின், பயணிகளை பயமுறுத்தியபடியே நடந்து சென்று உள்ளார். அவரது முயற்சிக்கு சற்று நேரத்திலேயே பலன் கிடைத்து உள்ளது. குனிந்தபடி, காதில் ஹெட்போன் போட்டு, பாட்டு கேட்டு கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் திடீரென சந்திரமுகியாக மாறியிருந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்ததும் அலறியடித்து ஓடினார்.

அதன்பின்னர், அவரது இடத்தில் அமர்ந்த பின்னும் சந்திரமுகியின் கோபம் தணியவில்லை. இந்த வீடியோ வைரலானதும், பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றனர். இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Next Story