குஜராத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் வெடித்து சிதறியது.. 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு !


குஜராத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் வெடித்து சிதறியது.. 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு !
x

குஜராத் மாநிலம் வல்சாத் அருகே மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் சரிகம் நகரில் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனத்தில் இரவு திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதில், அங்கு இருந்த 2 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததோடு, பயங்கரமாக தீ பற்றி எரிந்தது.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தீ பரவாமல் இருக்க, அங்கு இருந்த ரசாயனப் பொருட்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று, வெடிப்பு நடந்த பகுதியில் ஏராளமான ரசாயன நிறுவனங்கள் இருப்பதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 More update

Next Story