பெங்களூருவில் குடிநீர் குழாயில் திடீர் விரிசல்


பெங்களூருவில் குடிநீர் குழாயில் திடீர் விரிசல்
x

பெங்களூருவில் குடிநீர் குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு ஒயிட்பீல்டு குண்டலஹள்ளி சந்திப்பு பகுதியில் பூமிக்கு அடியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த குடிநீர் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி ஊழியர்கள், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் இணைந்து நேற்று குடிநீர் குழாயில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு உண்டானது. விரிசலை சரிசெய்யும் பணிகள் மீதம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் குண்டலஹள்ளி சந்திப்பு, எச்.ஏ.எல். பகுதியில் இன்று (திங்கட்கிழமை) குடிநீர் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story