புறநகர் ரெயிலில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறை; பயணி அதிர்ச்சி


புறநகர் ரெயிலில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறை; பயணி அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Jan 2023 12:17 PM GMT (Updated: 2023-01-24T17:49:37+05:30)

மும்பை புறநகர் ரெயிலில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறையை பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

புனே,


மராட்டியத்தில் மும்பை புறநகர் ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ரெயிலில், இடம் பிடிப்பது, கூட்ட நெரிசலால் தள்ளுவது போன்றவற்றால், கடந்த காலங்களில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மோதி கொள்ளும் சம்பவங்களும் நடந்து உள்ளன. வீடியோவாகவும் வெளிவந்து உள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பிற்காகவும் சில புறநகர் ரெயிலில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரெயில்களில் சுகாதார குறைபாடு உள்ளது என்று அவ்வப்போது விமர்சிக்கப்பட்டு வந்தன.

ஆனால், சமீபத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்டது அதிர்ச்சி அனுபவம். ஆம்பர்நாத் உள்ளூர் ரெயிலில் நேற்றிரவு 9.30 மணியளவில் ஏறிய அந்த நபர் கண்ட காட்சி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ரெயிலில் சீட் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று கிடந்து உள்ளது. கர்ரே சாலை பகுதியில் இருந்து ரெயில் தோம்பிவலி வந்து சேரும்வரை பெட்டியில் அப்படியே கிடந்து உள்ளது.

இதுபற்றிய புகார், மத்திய ரெயில்வேயின் மண்டல மேலாளருக்கு சென்றது. இதனை தொடர்ந்து, அவர் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கும்படி கூறியுள்ளார்.

இதுபற்றி ஒருவர், என்ன ஒரு காட்சி அது. பயன்படுத்தப்பட்ட ஆணுறை என்று தெரிவித்து, 9.40 மணி என நேரமும் குறிப்பிட்டு, ரெயிலின் சீட்டில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை கிடக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் மத்திய ரெயில்வே ஆகியோரை டேக் செய்து உள்ளார்.

எனினும், அந்த ரெயிலில் சி.சி.டி.வி. பதிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story