சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை


சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 10 May 2023 11:25 AM IST (Updated: 10 May 2023 11:25 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த போதை வாலிபரால் இளம் பெண் டாக்டர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கொல்லம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23).இவர நேற்று இரவு டூட்டி பார்த்து வந்தார்.கொல்லம் அஜீசியா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த டாக்டர் வந்தனா. பயிற்சியின் ஒரு பகுதியாக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

பூயப்பள்ளியை பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தீப் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. போதைக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு வீட்டில் தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டார். நிலைமை எல்லை மீறி போனாதால் வீட்டில் உள்ளவர்கள் போலீசை அழைத்து உள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது அதற்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார். மருத்துவ உபகரணைங்களை உடைத்து உள்ளார்.

அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து தக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடநிதனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.அவரது உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது.

பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து இந்திய மருத்துவ சங்கம் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு டாக்டர்கள் சங்கமான ஐஎம்ஏ கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.


Next Story