ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க கோாிக்கை


ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க கோாிக்கை
x

Image Courtesy: PTI 

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 2 பேருக்கு தொடா்ச்சியாக கொலை மிரட்டல் வருவதாகவும், போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சி தொிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா. இவா் டெல்லி சந்த் நகா் புராரி தொகுதியில் எம்.எல்.ஏ வாக உள்ளாா். இவருக்கு தொடா்ச்சியாக ரவுடி நீரஜ் பவானா என்ற பெயாில் பணம் கேட்டு போனில் மிரட்டல் வந்துள்ளது. பணம் கொடுக்க தவறினால் கொலை செய்து விடுவதாக அந்த நபா் மிரட்டி உள்ளாா்.

இதனையடுத்து அவா் போலீசில் புகாா் அளித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இந்த நிலையில், மற்றொரு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ வான அஜய் தத்திற்கும் நீரஜ் பவானா பெயாில் கொலைமிரட்டல் வந்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடா்பாளர் சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் பேசுகையில், டெல்லியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது.சாமானிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த விசயத்தில் உள்துறை மந்திாி அமித்ஷா தலையீட வேண்டும் என்றாா்.

மேலும், டெல்லியில் எம்எல்ஏ-வுக்கேபாதுகாப்பாக இல்லாதபோது சாமானியர்களின் கதி என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார். குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய டெல்லி போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவா் தொிவித்தாா்.

முன்னதாக, மிரட்டல் விடுத்த ஆடியோவையும் வெளியிட்டாா். அந்த ஆடியோவில், விக்கி கோப்ரா என்பவா் தான் ரவுடி நீரஜ் பவானாவின் கூட்டாளி என கூறி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறாா். பணம் தர மறுத்தால் எம்எல்ஏ வையும் அவரது குடும்பத்தை கொன்று விடுவதாக மிரட்டல் விடுகிறாா்.

தற்போது, ரவுடி நீரஜ் பவானா திகாா் சிறையில் தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story