சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணை


சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணை
x

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 9-ந்தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவலை வருகிற 5-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அமராவதி கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைப்போல சந்திரபாபு நாயுடுவை மேலும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story