அலுவல் மொழியாக இந்தி ஒட்டுமொத்த தேசத்தை ஒன்றிணைக்கிறது- உள்துறை மந்திரி அமித் ஷா பேச்சு


அலுவல் மொழியாக இந்தி ஒட்டுமொத்த தேசத்தை ஒன்றிணைக்கிறது- உள்துறை மந்திரி அமித் ஷா பேச்சு
x

ஒட்டுமொத்த தேசத்தை ஒரு அலுவல் மொழியாக இந்தி ஒன்றிணைப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த இந்திய மக்கள் தங்கள் தாய்மொழியைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் உள்துறை மந்திரி அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

இந்தி திவாஸைக் குறிக்கும் நிகழ்வில் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்தி அனைத்து இந்திய மொழிகளின் நண்பன் என்றும், அது ஒட்டுமொத்த தேசத்தை ஒரு அலுவல் மொழியாக ஒன்றிணைப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:

உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் உயிர். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியைக் கற்க வேண்டும்.

இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை நமது அதிகாரப்பூர்வ மொழியும் உள்ளூர் மொழிகளும் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.


Next Story