திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு
x

பக்தர்கள் நாளை முதல் 29-ந்தேதி வரை முன்பதிவு செய்யலாம்.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகின்றன. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகளில் பக்தர்கள் நாளை முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளும் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அதில் பக்தர்கள் நாளை முதல் 29-ந்தேதி வரை முன்பதிவு செய்யலாம்.டிக்கெட் பெறும் பக்தர்கள் டிக்கெட் கட்டணத்தை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story