அதானி குழும பங்குகள் தொடர் சரிவு - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி


அதானி குழும பங்குகள் தொடர் சரிவு - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
x

பங்குச்சந்தையில் வர்த்தம் தொடங்கியது முதல் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்து வருகிறது.

டெல்லி,

அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில் அந்த பங்கு விலை பெருமளவு குறைந்துவிட்டது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தையில் இன்று வர்த்தம் தொடங்கியது முதலே அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வார வர்த்தக முடிவில் 1 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட அதானி குழுமத்தின் எண்டர்பிரைஸ் ஒரு பங்கு இன்று 100 ரூபாய்க்கும் மேல் குறைந்து 1 ஆயிரத்து 180 ரூபாய் அளவில் வர்த்தகமாகுகிறது.

அதேபோல் அதானி குழுமத்தின் பிற பங்குகளின் விலையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் எழுச்சி பெறுமா? என்று முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு பின் மூலதன பங்குகளின் சந்தை மதிப்பு குறைந்து வருவதால் உலக பணக்காரர் வரிசையில் தற்போது 37வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story