பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில்... நாளை முக்கிய கட்டத்தை எட்டும் ஆதித்யா எல்-1 விண்கலம்


பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில்... நாளை முக்கிய கட்டத்தை எட்டும் ஆதித்யா எல்-1 விண்கலம்
x

ஒளிவட்டப் பாதை எனப்படும் சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் நுழைய உள்ளது.

புதுடெல்லி,

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ரேஞ்ச்' புள்ளி எல்-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதன்படி ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ந்தேதி(நாளை) மாலை 4 மணிக்கு 'லாக்ரேஞ்ச்' புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தைக் கொண்டு, ஒளிவட்டப் பாதை (Halo Orbit) எனப்படும் சுற்றுப்பாதையில் நுழைகிறது.

'லாக்ரேஞ்ச் புள்ளி' என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையை நடுநிலையாக்கும் ஒரு பகுதி ஆகும். இருப்பினும் சந்திரன், செவ்வாய், வீனஸ் போன்ற பிற கோள்களின் தாக்கத்தால் முழுமையான நடுநிலைப்பகுதி என்பது இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story