ஆதித்யா எல்-1 விண்கலம் ஜன.7-ல் நிலைநிறுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு


ஆதித்யா எல்-1 விண்கலம் ஜன.7-ல் நிலைநிறுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2023 5:04 PM GMT (Updated: 25 Nov 2023 5:05 PM GMT)

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

பெங்களூரு,

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். அங்கிருந்து விண்கலம் சூரியனை ஆய்வுசெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story