ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்களை சுட்டு கொன்று தொழிலதிபரை மீட்ட போலீசார்


ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்களை சுட்டு கொன்று தொழிலதிபரை மீட்ட போலீசார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 May 2023 9:56 PM GMT (Updated: 21 May 2023 3:33 AM GMT)

ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்களை சுட்டு கொன்று தொழிலதிபரை போலீசார் மீட்ட சம்பவம் நிகழ்ந்தது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டார். பின்னர் அவரை விடுதலை செய்வதற்கு ஈடாக குறிப்பிட்ட தொகையை வழங்கும்படி தொழிலதிபரின் குடும்பத்தினரிடம் கடத்தல்காரர்கள் கோரினர். இதற்கிடையே தொழிலதிபர் மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தொழிலதிபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடத்தல்காரர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று தொழிலதிபரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story