இல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி: தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்


இல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி: தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2023 5:09 AM GMT (Updated: 5 Aug 2023 5:28 AM GMT)

இம்மாத இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும் என கிரிசில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபரில் காரிப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வெங்காய விலை நிலவரம் பற்றி நேற்று ஒரு அறிக்கை வெளியானது. கிரிசில் சந்தை ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "வரும் ஆகஸ்டு இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம். இருப்பினும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சில்லரை சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும் என கூறப்படுகிறது.

தக்காளி விலை தற்போது தான் ரூ.200 ல் இருந்து மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


Next Story