டெல்லியில் குளிர்கால விடுமுறையை தொடர்ந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி எடுத்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட குளிர்கால விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து நாளை மறுநாள் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story