ரஷியாவில் தவித்த பயணிகளுக்கு அதிரடி ஆபர்... ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு


ரஷியாவில் தவித்த பயணிகளுக்கு அதிரடி ஆபர்... ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு
x

ரஷியாவில் 2 நாட்களாக தவித்த பயணிகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி-சான் பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் ஒன்று 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் கடந்த செவ்வாய் கிழமை புறப்பட்டு சென்றது. நடுவானில் திடீரென விமான என்ஜின்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது. இதனால், ரஷியாவின் மகதன் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என அதில் பயணித்த அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதில், போதிய உணவு, மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் பலரும் தவித்தனர் என தகவல் வெளியானது. பின்னர், மும்பையில் இருந்து சென்ற வேறொரு விமானம் உதவியுடன் அவர்கள் அனைவரும் இன்று மதியம் 12 மணியளவில் சான் பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தனர்.

இந்நிலையில், 2 நாட்களாக ரஷியாவில் தவித்த பயணிகளுக்கு சில சலுகைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. இதன்படி, விமான பயணிகளுக்கான பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படும். வருங்காலத்தில் பயணம் செய்வதற்கான வவுச்சர் ஒன்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

விமான பயணிகளுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், விமானத்தின் என்ஜின் ஒன்றில், குறைந்த எண்ணெய் அழுத்தம் இருப்பதற்கான அடையாளம் விமானிகளுக்கு தெரிய வந்தது.

இதனால், தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், அருகேயுள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவது என முடிவானது என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளது.


Next Story