மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு


மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு
x

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட ஒதுக்கீட்டு ஜூலை 27, 28ம் தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது.

தமிழகம் உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story