உத்தவ் தாக்கரேவுடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தொடர்பில் உள்ளதாக தகவல்


உத்தவ் தாக்கரேவுடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தொடர்பில் உள்ளதாக தகவல்
x

அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி என கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை காப்பாற்ற பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்த்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 55. ஆனால் தற்போது அதிருப்தி அணி வசம் மட்டுமே 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வசம் வெறும் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

சட்டசபையில் தற்போதைய பலம் 287 (உயிரிழந்த ஒரு எம்.எல்.ஏ.வை தவிர்த்து) ஆக உள்ளது. இதனால் 106 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் பா.ஜனதா சிவசேனா அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுடன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுஒருபுறம் இருக்க, ஏக்னாத் ஷிண்டே உள்ள அதிருப்தி மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது முதல் கட்டமாக அவர்களின் இலாகாக்கள் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


Next Story