மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு


மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு
x

மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறையுடன் கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உட்பட 71 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, பதவியேற்ற மந்திரிகளுக்கு தற்போது இலாகா ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அமித்ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உட்பட சில மந்திரிகள் ஏற்கெனவே வகித்த துறையை மீண்டும் ஏற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் கடந்த முறை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது எல்.முருகனுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறையுடன் கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


Next Story
  • chat