பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் அமரிந்தர் சிங் சந்திப்பு


பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் அமரிந்தர் சிங் சந்திப்பு
x

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் பஞ்சாப் முன்னாள் முதல்-மாந்திரி அமரிந்தர் சிங் சந்தித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங் உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று அவர் தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவை தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். இந்த நிலையில் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணையவுள்ளார். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இன்று இணைத்துக் கொள்கிறார்.

பாஜகவில் இணையவுள்ள நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங். இன்று மாலை அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ள நிலையில் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story