பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வியக்க வைக்கும் பெண் டாக்டரின் தண்ணீர் சிக்கனம்


பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வியக்க வைக்கும் பெண் டாக்டரின் தண்ணீர் சிக்கனம்
x

தண்ணீரை எப்படி சேமிக்க வேண்டும் என்று 4 வழிகளை பெண் டாக்டர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈர காகிதம் கொண்டு முகம் துடைப்பதாக வெளியான வலைத்தள பதிவு வைரலானது. தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அங்குள்ள பெண் டாக்டர் திவ்யா ஷர்மா சில ஆலோசனைகளை வழங்கியிருப்பது சமூக வலைதளங்களை பரபரப்பாகி உள்ளது.

அவர், 4 பேர் கொண்ட தனது குடும்பத்தின் தண்ணீர் பயன்பாட்டை தினசரி 600 லிட்டர் என்ற அளவில் சுருக்கிக்கொண்டதாக கூறி உள்ளார். மேலும் தண்ணீரை சேமிக்க 4 வழிகளை கூறி உள்ளார்.

1. ஷவர் குளியலை குறைத்து வாளி குளியலுக்கு மாறவும்.

2. குழாய்களில் தண்ணீரை சிக்கனமாக வெளியேற்றும் எரேட்டர் சாதனத்தை பொருத்தவும்,

3. வடிகட்டி கருவியில் (ஆர்.ஓ.) இருந்து வெளியாகும் நீரை கொள்கலனில் சேமித்து பயன்படுத்தவும்,

4. கார் கழுவுவதை நிறுத்தவும்.

இந்த நடைமுறைகளால் தனது வீட்டில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது என்பது பற்றிய கணக்கையும் அவர் விளக்கி கூறி உள்ளார். ஷவர் பயன்படுத்தி குளிக்கும்போது 3 மடங்கு தண்ணீர் காலியாவதாகவும், இந்த 4 விதிகளை பின்பற்றி தனது குடும்பத்தில் தினமும் 600 லிட்டர் தண்ணீர் வீணாவதை தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரது பதிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


Next Story