அமெரிக்காவில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர உதவுங்கள்


அமெரிக்காவில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர உதவுங்கள்
x

அமெரிக்காவில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர உதவுங்கள் என்று அவர்களது குடும்பத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா (வயது37), அவரது மனைவி பிரதிபா அமர்நாத் (37), குழந்தை யஷ் ஹொன்னல் (6) ஆகியோர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மகாணத்தில் வசித்து வந்தனர். அவர்கள் மூன்று பேரும் குண்டு காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்தனர். குடும்ப தகராறில் யோகேஷ் தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். நிலைமையை எடுத்துக்கூறிய அவர்கள், இறுதிச்சடங்கு நடத்துவதற்காக அவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் உறுதியளித்த சித்தராமையா, அவர்களின் உடல்களை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயலுக்கு உத்தரவிட்டார்.


Next Story