சீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக்கில் கூடுதல் படைகளை நிலைநிறுத்த உள்கட்டமைப்பை உருவாக்கியது இந்திய ராணுவம்


சீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக்கில் கூடுதல் படைகளை நிலைநிறுத்த உள்கட்டமைப்பை உருவாக்கியது இந்திய ராணுவம்
x

எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்திற்கு பதிலடியாக, இந்தியா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

புதுடெல்லி,

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்திற்கு பதிலடியாக, கிழக்கு லடாக் பிரிவில் இந்தியா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய ராணுவம் இந்தப் பகுதியில் சீனாவைப் போல அல்லாமல் 450 டாங்கிகள் மற்றும் 22,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய பாங்காங் த்சோ ஏரியில் சீனா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள, கிழக்கு லடாக்கில் புதிய தரையிறங்கும் தளங்களை இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் நிலைநிறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக இந்தியாவின் எல்லை ரோந்து திறன் அதிகரித்துள்ளது. இதனுடன் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவப் பொருட்களை எளிதாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 22,000 வீரர்களுக்கான தளவாடங்கள் மற்றும் சுமார் 450 ஏ வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளுக்கு இடமளிக்கும் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை முடிப்பது மற்றும் பாதுகாப்புத் தயார் நிலையை மேம்படுத்துவதற்காக, நிலையான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ராணுவத்தின் கவனம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story