திருப்பதி கோவிலில் நாளை அமித்ஷா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
திருப்பதி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பதிக்கு செல்லும் அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபட உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடங்கள், விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். சாதாரண உடை அணிந்த போலீசார் பக்தர்கள் கூடும் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story