அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஹெலிகாப்டர் புறப்பட்டபோது திடீரென சிறிதுநேரம் கட்டுப்பாட்டை இழந்தது.
பீகார்,
நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் பறந்தது. சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித்ஷா உயிர் தப்பினார்.
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சிறிதுநேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story