ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்


ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2022 2:46 AM IST (Updated: 5 Aug 2022 5:18 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் 12:38 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஃபைசாபாத் நகரில் நள்ளிரவு 12:38 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

அந்நாட்டில் கடந்த ஜூன் இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு குறைந்தது ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1,500க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story