காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த வாரம் புதன்கிழமை தெற்கு கடோல் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள், போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் ராணுவ வீரர் என 4 பேர் வீரமரணமடைந்தனர். 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 நாட்களாக நீடித்த இந்த துப்பாக்கி சண்டை நேற்று முடிவுக்கு வந்தது.

இது குறித்து காஷ்மீர் கூடுதல் போலீஸ் டிஜிபி விஜய் குமார் கூறும் போது, "துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உசைர் கானும் அடங்குவார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு பயங்கரவாதியின் உடலை மீட்க முடியவில்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அங்கு இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது" என தெரிவித்தார்.


Next Story