'அண்ணாமலை நடைபயணம் செய்வதாக சொல்லிவிட்டு சொகுசு பயணம் செய்கிறார்' - கே.எஸ்.அழகிரி


அண்ணாமலை நடைபயணம் செய்வதாக சொல்லிவிட்டு சொகுசு பயணம் செய்கிறார் - கே.எஸ்.அழகிரி
x

விளம்பரத்திற்காகவே ஆளும் கட்சியை குறை சொல்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்டு வருவது நடைபயணம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், நடைபயணம் செய்வதாக சொல்லிவிட்டு அண்ணாமலை சொகுசு பயணம் செய்கிறார் என்று கூறினார். மேலும் விளம்பரத்திற்காகவே ஆளும் கட்சியை குறை சொல்கிறார்கள் என்றும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.



1 More update

Next Story