பிரதமர் மோடியை தேச விரோதிகள் பஸ்மாசுரனாக பார்க்கின்றனர்; நாட்டு மக்கள் கடவுள் நாராயணனாக பார்க்கின்றனர்: பா.ஜ.க.


பிரதமர் மோடியை தேச விரோதிகள் பஸ்மாசுரனாக பார்க்கின்றனர்; நாட்டு மக்கள் கடவுள் நாராயணனாக பார்க்கின்றனர்: பா.ஜ.க.
x

பிரதமர் மோடியை தேச விரோதிகள் பஸ்மாசுரனாகவும், நாட்டு மக்கள் கடவுள் நாராயணனாகவும் பார்க்கின்றனர் என பா.ஜ.க. கூறியுள்ளது.


பெங்களூரு,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. வி.எஸ். உக்ரப்பா பேசும்போது, பிரதமர் மோடியை பஸ்மாசுரன் என கூறினார். அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமரை ராவணா என கூறிய சில நாட்களில் பஸ்மாசுரன் என உக்ரப்பா கூறியுள்ளார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் சி.டி. ரவி. செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ஊழல்வாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருக்கிறார். அதனால், அவர்களுக்கு பிரதமர் மோடி பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால், நாட்டு மக்களுக்கு அவர் கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார்.

ஊழலை பஸ்மம் (எரித்து சாம்பல் ஆக்குவது) செய்வதற்காக பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்றும் ரவி கூறியுள்ளார். இதுதவிர, சித்தராமையா போன்ற தலைவர்கள் இந்துத்துவா மற்றும் தேசியவாத தலைவர்களான என்னை வகுப்புவாதிகள் என கூறுகிறார்.

ஆனால், தாவூத் இப்ராகிம் போன்றவர்களை மதசார்பற்றவர்கள் என கூறுவார். அது காங்கிரசின் மனநிலை என்று அவர் கூறியுள்ளார். தாவூத் இப்ராகிம் மதசார்பற்றவராக இருப்பதற்காக அவருக்கு காங்கிரஸ் கட்சி சான்றிதழ் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story