நாட்டின் பாதுகாப்பு செயலாளராக அரமனே கிரிதர் நியமனம்


நாட்டின் பாதுகாப்பு செயலாளராக அரமனே கிரிதர் நியமனம்
x

நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளராக அரமனே கிரிதர் என்பவரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.



புதுடெல்லி,


நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளர் நியமனம் பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுபற்றிய செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளராக உள்ள அரமனே கிரிதர், நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளராக தற்போது உள்ள அஜய் குமார் பதவி காலம் நடப்பு ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து கிரிதரின் நியமனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் பதவி காலம் வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் நிறைவடைகிற சூழலில், நிதியமைச்சகத்தின் நிதி சேவை துறைக்கான செயலாளராக உள்ள சஞ்சய் மல்கோத்ரா, அடுத்து அந்த பதவியை வகித்திடுவார் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


Next Story