மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டபோது தகராறு: மகன் கையை கோடரியால் துண்டித்த தந்தை...!


மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டபோது தகராறு: மகன் கையை கோடரியால் துண்டித்த தந்தை...!
x

மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மகன் கையை கோடரியால் தந்தை துண்டித்துள்ளார்.

டாமோ,

மத்திய பிரதேச மாநிலம் டாமோ நகருக்கு அருகே உள்ளது போபாய் கிராமம். இங்கு மோடி பட்டேல் (வயது51) என்பவர் தனது மகன்கள் ராம் கிஷன் (24) மற்றும் சந்தோசுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மோடி பட்டேல் தனது மூத்த மகனுடன் வெளியே செல்வதற்காக இளைய மகன் சந்தோசிடம் அவனது மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டுள்ளார். அப்போது சந்தோஷ் சாவி கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது தந்தையும், அண்ணனும் சேர்ந்து சந்தோசை தாக்கத் தொடங்கினர். ஆத்திரம் தீராத தந்தை, மகன் என்றும் பாராமல் கோடரியால் அவனது கையை துண்டித்து விட்டார். பின்னர் துண்டித்த கையுடன் போலீசில் சரண் அடைந்தார். ஆனால் கைதுண்டான சந்தோஷ், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து தந்தை-மகன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


Next Story