அரிக்கொம்பனை மீண்டும் கொண்டு வர வேண்டும்... பழங்குடியின மக்கள் திடீர் போராட்டம் - கேரளாவில் பரபரப்பு


அரிக்கொம்பனை மீண்டும் கொண்டு வர வேண்டும்... பழங்குடியின மக்கள் திடீர் போராட்டம் - கேரளாவில் பரபரப்பு
x

அரிக்கொம்பன் யானையை மீண்டும் சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்து பூப்பாறை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டத்திற்குள் 'அரிக்கொம்பன்' யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாக கொண்டுவரப்பட்டன.

இந்த சூழலில் அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் உலா வந்தது. இந்த நிலையில் 7 நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை இன்று காலையில் பிடிபட்டது.

தேனி சின்னமனூர் அருகே உலா வந்த அரிக்கொம்பன் யானையை 4 மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டநிலையில், அவற்றின் உதவியுடன் அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு கோதையாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரள மாநிலம், சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்து கேரள மாநிலம் பூப்பாறை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story