காஷ்மீரில் ராணுவ ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 2 வீரர்கள் பரிதாப பலி


காஷ்மீரில் ராணுவ ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 2 வீரர்கள் பரிதாப பலி
x

காஷ்மீரில் ராணுவ ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலியாகினர்.

ஜம்மு,

காஷ்மீர் அருகே ரஜோரி மாவட்டத்தில் ராணுவ ஆம்புலன்ஸ் ஒன்று மலைப்பாதையில் இறங்கி கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவின்போது எதிர்பாராமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

டுங்கிகாலா பகுதியில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story