காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து


காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து
x
தினத்தந்தி 4 May 2023 6:52 AM GMT (Updated: 4 May 2023 7:17 AM GMT)

ராணுவ ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச்ம கிஷ்ட்வர் மாவட்டத்தில் இன்று 3 பயணிகளுடன் ராணுவ ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. மர்வஹ் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

மலைப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எஞ்சிய 1 பயணியை தேடும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story