மனைவியை கொன்று தலைமறைவான தொழிலாளி கைது
பெங்களூரு அருகே மனைவியை கொன்று தலைமறைவான தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ், தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 38). கடந்த அக்டோபர் 9-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மஞ்சுளாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சிவராஜ் தலைமறைவாகி விட்டார். மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை சிவராஜ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சிவராஜை தேடிவந்தனர். இந்த நிலையில், சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில்,தலை மறைவாக இருந்த சிவராஜை கைது செய்ய 300 கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதாக பெங்களூரு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். அதாவது சிவராஜை கைது செய்ய துமகூரு, மண்டியா, ஹாசன், சிவமொக்காவில் உள்ள 300 கிராமங்களுக்கு போலீசார் சென்றிருந்தனர். இறுதியில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.