டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 58 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story