கங்கை நதியில் கரைக்கப்பட்ட பிரதமர் மோடி தாயாரின் அஸ்தி
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் முதுமை காரணமாக மரணமடைந்தார்.
டேராடூன்,
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் முதுமை காரணமாக கடந்த டிசம்பர் 30ம் தேதி தனது 90வது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
ஹீராபென்னின் உடல் 30-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. தனது தாயாரின் சிதைக்கு பிரதமர் மோடி எரியூட்டினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் அஸ்தி நேற்று கங்கை நதியில் கரைக்கப்பட்டது. தனது தாயார் ஹீராபென்னின் அஸ்தியை பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் கரைத்தார்.
Related Tags :
Next Story