சட்டப்பேரவை தேர்தல் 2023: ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலை


சட்டப்பேரவை தேர்தல் 2023: ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்னிலை
x

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

ஜெய்ப்பூர்,

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், தான் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரசை விட பாஜக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story