போதைப்பொருள் விற்றவரின் சொத்துகள் முடக்கம்


போதைப்பொருள் விற்றவரின் சொத்துகள் முடக்கம்
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:45 PM GMT)

போதைப்பொருள் விற்றவரின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு கே.ஆர்.போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு மிருதஞ்செயா என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களை விற்பனை செய்து, பல்வேறு இடங்களில் அவர் பலகோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் மிருதஞ்செயாவுக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலம் உள்பட அனைத்து சொத்துக்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.


Next Story