கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர் பணி நீக்கம்


கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியரை பணி நீக்கம் செய்து கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டார்.

கொள்ளேகால்-

கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியரை பணி நீக்கம் செய்து கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் ஊழியராக ஸ்ரீபிரகாஷ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கொள்ளேகால் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜீவிகவுடா படாவனே பகுதியில் உள்ள அரசு நிலத்தை முறைகேடாக வேறொருவருக்கு பட்டா செய்து கொடுத்ததாகவும், அதற்காக பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு நடந்தது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டார்.

பணி நீக்கம்

அதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஊழியர் ஸ்ரீபிரகாஷ், முறைகேட்டில் ஈடுபட்டதும், லஞ்சம் வாங்கியதும் உறுதியானது. அதையடுத்து அதிகாரிகள் கலெக்டர் ஷில்பா நாக்கிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில் ஊழியர் ஸ்ரீபிரகாசை பணி நீக்கம் செய்து கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story